சில்லறை வர்த்தக நிலையங்களில் பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு எதிராக எதிர்வரும் 14 நாட்களுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் என வர்த்தக நுகர்வோர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வெலிசர பொருளாதார மத்திய நிலையத்தில் கண்காணிப்பு விஜயத்தில் கலந்து
கொண்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
"நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளரைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக
உள்ளது. பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாத வர்த்தகர்களைப் போலவே அது
தொடர்புபட்ட பிரதேசத்திற்குப் பொறுப்பான நுகர்வோர் அலுவல்கள் அமைச்சின்
அதிகாரியும் இதற்குப் பொறுப்பானவர்கள்.
வர்த்தகப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் நுகர்வோருக்கு விற்பனை செய்வதற்கும் இடையே விலையில் பாரிய முரண்பாடு காணப்படுகிறது.
பொருட்களின் விலைகள் காட்சிப்படுத்தப்படும் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்யும் பொறுப்பானது நுகர்வோருக்கு உண்டு. நுகர்வோர் அதிகாரசபை மற்றும் தமது அமைச்சின் கீழ் உள்ள எந்தவொரு நிறுவனத்திலும் ஊழல் செய்யும் விதத்தில் அதிகாரிகள் செயற்படின் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.