கிழக்கு மாகாண வருடாந்த கராத்தே போட்டி இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

 












 விளையாட்டு துறை அமைச்சின் கீழ் இயங்குகின்ற ஶ்ரீலங்கா கராத்தே சம்மேளனத்தின் 2023 ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண வருடாந்த கராத்தே போட்டி இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதில்  06 தொடக்கம் 13 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு மாவட்ட  மட்ட போட்டிகளும், 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாகாண  மட்ட போட்டிகளும் இடம் பெற்றன.

 இப்போட்டியில் Japan karate do shotokan study association (JKSSA) கராத்தே சங்கத்தின் மாணவர்கள் 61 பேர் பங்கு பற்றி 43 தங்க பதக்கங்களையும், 23 வெள்ளி பதக்கங்களையும் , 14 வெண்கல பதக்கங்களையும் பெற்றுள்ளதோடு 45 மாணவர்கள் தேசிய கராத்தே போட்டிக்கும் தெரிவாகியுள்ளனர்.

 இப்போட்டியானது விரைவில் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது.

 இப்போட்டிக்கு மாணவர்களை வழிப்படுத்திய JKSSA  அமைப்பின் பிரதம ஆசிரியர் sensei -  H.M. விஜய குமார அவர்களுக்கும் மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களான S.மனோகரன், T.சதானந்தகுமார், AR. நவாஸ், R. அலோஜிதன் ஆகியோர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களையும் நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.