மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம்
பகுதியில் நேற்று மாலை
யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.
யானையின் தாக்குதலுக்கு இலக்காகி, நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.
59 வயதுடையை நாகமணி நாராயணப்பிள்ளை என்ற 4 பிள்ளைகளின் தந்தையே
உயிரிழந்தவராவர். விவேகானந்தபுரம் ஆயிரம்கால் மண்டபத்தில் உள்ள வைரவர்
ஆலயத்திற்கு வழிபடச் சென்றபோதே இவ் அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இன்று காலை சடலத்தை அவதானித்தவர்கள் வெல்லாவெளிப் பொலிஸாருக்குத்
தகவல் வழங்கியுள்ளனர். வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவில் யானை-மனித மோதல்
சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், இதனைத் தடுக்க
நடவடிக்கை எடுக்குமாறு அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.