மட்டக்களப்பில் அரங்கேறிய விழிப்புணர்வு வீதி நாடகங்கள்!













(கல்லடி செய்தியாளர்)

கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், மண்முனை வடக்குப் பிரதேச செயலகமும் இணைந்து நடத்திய வீதி நாடகம் மட்டக்களப்பில் அரங்கேறியது.

"கலாசார சீர்கேடு மற்றும் போதை ஒழிப்பு" சம்பந்தமான விடயங்களை மக்களுக்கு உணர்த்தும் வகையில் மட்டக்களப்பு கூத்தம்பலம் கலை, பண்பாட்டு மையத்தால் மட்டக்களப்பின் காந்திப் பூங்கா, கல்லடிக் கடற்கரை ஆகிய  இடங்களில் இவ்வீதி நாடகங்கள் அரங்கேற்றப்பட்டது.

இவ்விழிப்புணர்வு வீதி நாடகத்தைக் கண்டு களிக்க இளைஞர்கள், யுவதிகள், வயோதிபர்கள், குழந்தைகள், முதியவர்கள் எனப் பல நூற்றுக்கணக்கானோர் வருகை தந்திருந்தனர்.