மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் பல்வேறு
கோரிக்கைகளை முன்வைத்து நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்கு
பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கிடையிலான
விளையாட்டு விழாவிற்காக குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதைக்
கண்டித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை சுழற்சி முறையில் நடாத்தப்படுகின்ற
விளையாட்டு விழாவினை சுமார் நாற்பது வருடங்களின் பின்னர் கிழக்கு பல்கலைக்
கழகத்திற்கு
கிடைத்துள்ள போதும், திறமையான மாணவர்கள் ஊக்குவிக்கப்படவில்லையென்றும்
விளையாட்டு விழாவிற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியில் பெரும் பகுதி
விழாவின் கழியாட்டங்களுக்காகவே செலவிடப்படவுள்ளதாகவும்
ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா
புலமைப்பரிசில் நிதி கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டுமென மாணவர்களினால்
கோரிக்கை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.