மட்டக்களப்பு வவுணதீவு மற்றும் செங்கலடி பிரதேச சபைகளுக்கு இடையிலான, நரிப்புல்தோட்டம்-பங்குடாவெளிப் பாலத்தைப் புனரமைத்துத்
தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வவுணதீவு மற்றும் செங்கலடி பிரதேச சபைகளின் எல்லைக் கிராமங்களில் வாழும் மக்கள், போக்குவரத்து
நடவடிக்கைகளுக்காக தோணிகளில் இணைக்கப்பட்ட பாதைகளையே பயன்படுத்தி வருகின்றனர்.
மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் நாளாந்தம் பயணிக்கும் இக் கிராம மக்கள், போக்குவரத்தை இலகுபடுத்த பாலமொன்றை அமைத்துத்
தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நரிப்புல்தோட்டம்-பங்குடாவெளிப்
பாலத்தை நிர்மாணிக்க கடந்த காலங்களில் அடிக்கல் நாட்டப்பட்டபோதும்,
அதற்குப் பின்னர் எவ்வித நடவடிக்கைகளும்
எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.