மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கதிர்காம யாத்திரிகர்கள் செல்லும் வழியில் அன்னதானம் வழங்கும் விடயம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் தெரிவித்த கருத்தானது ஒட்டுமொத்த பாதயாத்திரை செல்வோரையும் அவமதிக்கும் கருத்தாகும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.--
மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
மாநகரசபை ஊழியர்கள் அனைவரும் தொண்டு அடிப்படையிலேயே அன்னதானம் வழங்கும் பணியில் பங்குகொண்டார்களே தவிர எந்தவித களவும் அங்கு இடம்பெறவில்லையென தெரிவித்தார் .