சபரகமுவ பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற யுவதியொருவர் கடந்த 29ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சத்குணரத்தினம் கௌசிகா என்ற 27 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதியின் சடலம் காவல்துறையினரால் வட்டுக்கோட்டை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.