மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் அனுசரணையோடு தொழில் சந்தை ஒன்று இடம் பெற்றது

























SHIVA MURUGAN

மட்டக்களளப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்றிருக்கும்  இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கத்துடன் தொழில் சந்தை ஒன்று
 மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் அனுசரணையோடு 2023.07.13 இன்று மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் நடை பெற்றது.
 20 இற்கும்  மேற்பட்ட பல நிறுவனங்கள் இதில்  பங்கு பற்றி  தொழில்  வாய்ப்பினை வழங்குவதற்கு முன்வந்திருந்தனர்.
இவ் தொழில்சந்தையினூடாக  பெருமளவிலான இளைஞர் யுவதிகள் தொழில்வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள மிகவும்  ஆர்வமுடன்  வருகை தந்திருந்தனர் .