மட்டக்களப்பு அமிர்தகளி ஸ்ரீ மாமங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை உற்சவம் எதிர்வரும் 7ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 16ஆம் திகதி இடம் பெற உள்ள தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெற உள்ளது. உற்சவ காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள முன் ஆயத்த நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடல் இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல்
நிகழ்வில் மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்குமார் சபையினர், மாநகர சபை பிரதி
ஆணையாளர் சிவராஜா, உதவி பிரதேச செயலாளர் பிரதேச பொது சுகாதார வைத்திய
அதிகாரி அலுவலக வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ்
உத்தியோகத்தர்கள், ஆலய நிர்வாக சபையினர் என பலர்கலந்து கொண்டனர்.