இலங்கை இந்திய படகுச் சேவையைத் தொடங்க இலங்கை தயாராக தயாராகஇருக்கிறது

 


 இந்திய படகுச் சேவையைத் தொடங்க இலங்கை தயாராக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவுக்கும் (பாண்டிச்சேரி) காங்கேசன்துறைக்கும் எந்த நேரத்திலும் படகுச் சேவையைத் தொடங்க இலங்கை தயாராக இருப்பதாகவும் ஆனால் இந்தியா அனுமதி வழங்காததால்தான் இந்தச் சேவையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஒரு கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

“இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் எங்களுக்கு படகு சேவை வேண்டும். காங்கேசன்துறை துறைமுகத்தில் பயணிகள் முனையம் மற்றும் பிற வசதிகளை நாங்கள் அமைத்துள்ளோம்.

இந்தியாவுடன் எங்களுக்கு கிடைத்த சமீபத்திய தகவல்களின்படி, அவர்கள் படகு சேவையை மாத்திரமே ஆரம்பிக்க முடியும் என கூறியுள்ளார்கள். தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து மாத்திரம் இந்த சேவையை தொடங்க முடியும் எனவும் இந்தியா குறிப்பிட்டுள்ளது” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவுடனான பாதுகாப்பு மதிப்பீட்டின்படி இலங்கைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்த திட்டத்துக்கு யார் ஒப்புதல் அளித்தாலும், நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம் என்றார்.

படகு நடத்துநர்கள் இந்திய அரசாங்கத்தை தொடர்புகொண்டு, தங்களின் நற்சான்றிதழ்கள் மற்றும் அவர்களின் உண்மையான தன்மையை நிரூபித்து, நாகப்பட்டினத்திலிருந்து படகு தொடங்குவதற்கு இந்தியாவிடம் அனுமதி பெற வேண்டும்.

இந்திய அரசாங்கம் பச்சை கொடி காட்டிய தருணத்திலிருந்து, எந்தவொரு கப்பலையும் பெறுவதற்கு நாங்கள் அனுமதி வழங்குவோம் என்றார்.

படகு நடத்துனர்களை இந்தியாவுக்கு வந்து அங்கு படகு நடத்துனர்களாக அங்கீகரிக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

படகு நடத்துனர்களிடம் இருந்து பதினைந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் கூறினார். இந்தியாவில் சில தெரிவு நடைமுறைகள் இருக்கும். படகு நடத்துனர்களுக்கான 15 விண்ணப்பங்களையும் இந்திய அரசாங்கம் அங்கீகரித்தால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் படகு நடத்துனர்களிடமிருந்து பதினைந்து விண்ணப்பங்களைப் பெற்றதாக தெரியவருகிறது.

இந்தியாவில் சில தேர்வு நடைமுறைகள் இருக்கும். படகு நடத்துனர்களுக்கான 15 விண்ணப்பங்களையும் இந்திய அரசாங்கம் அங்கீகரித்தால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார். R