(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு நாவலடி முருகேசு சுவாமிகள் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் ஆன்மீகச் சுற்றுலாவை மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை (22) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தைத் தரிசித்தனர்.
இதன்போது ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிவ பூமி திருமந்திர அரண்மனையை அவர்கள் பார்வையிட்டனர்.
அதன் பின்பு தாந்தா மலை முருகன் ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.
இவ்ஆன்மீகச் சுற்றுலாவில் அறநெறிப் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் காயத்திரி ஆலய நிருவாகசபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.