வெபர் உள்ளக அரங்கில் பூப்பந்தாட்டப் பயிற்சிப் பட்டறை ஆரம்பமானது.















உலக பூப்பந்தாட்டத் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு பூப்பந்தாட்டச் சங்கம் மட்டக்களப்பு வலயக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து ஒவ்வொரு பூரணை தினத்திலும் நடாத்த திட்டமிடப்பட்ட பூப்பந்தாட்ட பயிற்சிப் பட்டறையானது இன்று(03)  மட்டக்களப்பு பூப்பந்தாட்டச் சங்கத்தின் தலைவர் சீ.இராஜேந்திரா தலைமையில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 06ல் கல்வி கற்கும் 100 மாணவர்களுடன் வெபர் உள்ளக அரங்கில் மிகவும் சிறப்பான முறையில் ஆரம்பமானது.

இப் பயிற்சி முகாமிற்கான பயிற்சியாளராக ஜனாப். கலாம்டீனின் வழிநடத்தலுடன் ஆரம்பமானது.

இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு  வலயக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ். லவக்குமார், தொழிலதிபர் கிருஸ்டி கமல்ராஜ் கொன்சேகா,  அருட்தந்தை ஜீவராஜ்
மற்றும் உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர்  ரவிந்திரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பாடசாலை உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள், மற்றும் மட்டக்ளப்பு மாவட்ட பூப்பந்தாட்ட சங்கத்தின் வீரர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.