வாகனங்களை தவிர அனைத்து பொருட்களுக்குமான இறக்குமதி தடை நீக்கப்பட உள்ளது .

 

 


எதிர்வரும் செப்டெம்பர் முதல் வாரத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க, நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.

வாகனங்கள் உட்பட 930 இதர பொருட்களுக்கு இறக்குமதி தடை அமுல்படுத்தப்படும். இறக்குமதி தடைகளை நீக்குவது செப்டம்பர் முதல் வாரத்தில் இரண்டு கட்டங்களாக செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.