(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் "சுவாமி விபுலானந்தர் நினைவுப் பேருரை" நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்லத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத் தலைவர் சாரங்கபாணி அருள்மொழி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் உதவிப் பொது முகாமையாளர் சுவாமி சுரார்சிதானந்தர் ஆன்மீக அதிதியாகவும், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எந்திரி ந.சிவலிங்கம் பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றக் காப்பாளர் மு.பவளகாந்தன் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
இதன்போது "தமிழில் பல்துறை முன்னோடி சுவாமி விபுலானந்தர்" எனும் தலைப்பில் பேராசிரியர் செ.யோகராசா உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.