யாழ்ப்பாணம் என்பது சைவமும் தமிழும் கொட்டி கிடக்கின்ற ஒரு அருள் பூமி,
இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த
தென்னிந்திய திரைப்பட நடிகையும் பேச்சாளருமான கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
தாவாடி அம்பலவான முருகன் ஆலயத்தின் திருமஞ்ச திருவிழாவுக்கு வருகை தந்து சிறு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் என்பது அருள் பூமி. இலங்கை முழுவதுமே முருகனின் கடாட்சம் தான் அமைந்துள்ளது.
இப்போது தான் ஆங்காங்கே விகாரம் கட்டுகிறார்கள். சைவ சமயமும் இங்கேதான்
இருக்கிறது தெற்கில் கதிர்காமம் முதல் வடக்கே நல்லூர் யாழ்ப்பாணம் வரை
எல்லாமே அவன் அருள் மட்டுமே இருக்கிறது.
இதை யாரும் மறுக்க முடியாது. தமிழ் கடவுள் முருகன் இருக்கும் வரை தமிழ் உறவுகள் இருக்கும் வரை யாரும் நம்மளை அசைக்க முடியாது.
இந்த கோயிலுக்கு உள்ளே வரும் பொழுது அருமையான மந்திரங்கள் எல்லாம் ஓங்கி
ஒலித்தன அதேபோன்று தமிழ் நாதஸ்வர கலைஞர்களின் அற்புத இசையில் எம்பெருமான்
வளம் பெறும் காட்சி அற்புதமானது.
தமிழ்நாட்டில் எல்லாம் இவ்வாறு கிடையாது. எல்லாவற்றையும் அரசு எடுத்துக்
கொண்டது அதற்குப் பிறகு உண்டியலில் பணம் நிரப்புவதை மட்டுமே அவர்கள்
குறியாக கொண்டிருந்தார்கள் இப்படியான அருமையான காட்சிகள் எல்லாம் அங்கே
குறைந்துவிட்டது. என்ன தெரிவித்துள்ளார்.