இதனை கருத்திற்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி சபை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனம் ஆகியவை மாவட்ட நிருவாகம் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிடம் விடுத்த வேண்டுகோளிற்கு அமைவாக மேற்கொண்ட கள விஜயத்தினை தொடர்ந்து இன்று (04) மட்டக்களப்பு முகத்துவாரம் பகுதியில் ஆற்றுவாய் வெட்டும் பணிகள் இடம்பெற்றன.
குறித்த பணியானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைவாக மாவட்ட மேலதிக அராசாங்க அதிபர் திருமதி. சுதர்சனி ஸ்ரீகாந்தின் மேற்பார்வையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே. ஜெகன்நாத், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் அருளானந்தராஜா ரமேஸ் உள்ளிட்ட மீன்பிடி அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இதனூடாக களப்புடன் கலந்துள்ள காட்டு வெள்ளநீர் கடலுக்குள் வடிந்து சென்றுவிடும் எனவும், வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளிற்குட்பட்ட விவசாயிகளது 3000 ஏக்கர்களில் செய்கை பண்ணப்பட்டுள்ள வயல்கள் அறுவடையை செய்யமுடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.