DSI நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட 19 வயதுக்குட்பட்ட மாவட்ட மட்ட கரப்பந்தாட்டப் போட்டியானது மட்டக்களப்பு சந்திவெளி மைதானத்தில் நடைபெற்றது.இறுதிப் போட்டியில் வாழைச்சேனை இந்துக் கல்லூரியை எதிர்த்தாடிய காத்தான்குடி மத்திய கல்லூரியானது
முதல் செட்டில் 18:25 என்று பின்னடைவை சந்தித்தாலும்
இரண்டாவது செட்டில் 25:14
மூன்றாவது செட்டில் 25:11 என்று முன்னிலை வகித்து
இறுதியில் 2-1 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று
இரண்டாவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை சுவீகரித்து
மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டிக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்து பயிற்சிகளில் ஈடுபட்டு வெற்றியீட்டிய மாணவர்களுக்கும், இரவு பகல் பாராது மாணவர்களுக்கு பயிற்சியளித்த விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் ARM. சஜான் அவர்களுக்கும் பாடசாலை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர் பாடசாலை சமூகத்தினர்.