ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வதே தனது இலங்கை விஜயத்தின் நோக்கம் - இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா

 


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது, அவருக்கு அமோக வரவேற்பளிக்கப்படும் என இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வதே தனது இலங்கை விஜயத்தின் நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

குறுகிய கால பயணமாக கொழும்பிற்கு வருகை தந்த இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, பாதுகாப்பு அமைச்சில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று பிற்பகல்  சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி, இரு நாட்டு மக்களுக்கும் பலனளிக்கும் வகையில் சமூக , பொருளாதார இலக்குகளை அடைவது தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.