(கல்லடி செய்தியாளர்)மட்டக்களப்பு கல்வி வலய மட்டத்தில் நடைபெற்ற தமிழ்த் தினப் போட்டியில் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான பாவோதலில் மட்டக்களப்பு அருணோதயம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி சிவானந்தராசா கனிஸ்கா முதலாம் இடத்தினைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இப் போட்டி நிகழ்வு மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.