மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள காத்தான்குடி மீரா பாலிகா
வித்தியாலய தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களை, மீண்டும் பாடசாலைக்கு அழைக்கும் நிகழ்வு
01.07.2023 நடைபெற்றது.
பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு இடம்பெற்றது.
பேரணியானது பாடசாலை முன்பாக பஸ்மலா சதுக்கத்தில் ஆரம்பமாகி, பிரதான வீதி வழியாக சென்று மீண்டும்
பாடசாலையில் நிறைவடைந்தது.
பிரதான ஒன்று கூடல் மண்டபத்தில் பழைய மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், கௌரவிப்பும்
நடைபெற்றது.
நிகழ்வில் பாடசாலை அதிபர் அஷ்ஷெய்ஹ் யு.எ.மன்சூர், முன்னாள் அதிபர் இஸ்மாலெவ்வை, பாடசாலை பழைய
மாணவர் சங்க செயலாளர் முபீதா, பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள்
என பலர் கலந்து கொண்டனர்.