பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மாட்டிறைச்சி கறியில் எலி இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில், விவேக்குமார் என்பவர், கடந்த வாரம் குடும்பத்துடன் உணவு சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளை ஓடர் செய்துள்ளனர்.
இதன்போது வழங்கப்பட்ட உணவை சாப்பிடும் வேளையில், மாட்டிறைச்சி கறியில் எலி இறந்து கிடந்துள்ளது. உடனே அதிர்ச்சியடைந்த குடும்பம், உணவக உரிமையாளரிடம் முறையிட்டுள்ளது.
ஆனால், அதை ஏற்க மறுத்த ஹோட்டல் உரிமையாளர் அந்தக் குடும்பத்தையே மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் காணொளி எடுத்த விவேக்குமார் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் ஹோட்டல் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.