கஞ்சா செடியை வணிகப் பயிராக மாற்றும் நோக்கில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆயுர்வேத திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கமல் பந்துல வீரப்பெரும மற்றும் கல்ஹனகே நாணயக்கார ஆகிய இரு ஆயுர்வேத வைத்தியர்களினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதிவாதிகளாக சட்டமா அதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
ஆயுர்வேத மருத்துவ சட்டத் திருத்தம் தொடர்பான “ஆயுர்வேத திருத்தச் சட்டமூலம்” கடந்த 5ஆம் திகதி நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயிரிட உத்தேசிக்கப்பட்டுள்ள கஞ்சா செடி, வர்த்தகப் பயிராக மாகாண சபை பட்டியலில் உள்ளடங்கியுள்ளதாகவும், மருத்துவத் தோட்டங்களில் பயிரிடுவது தொடர்பான விதிகள் 7 மற்றும் 9 ஆம் பிரிவுகளில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.