புலம்பெயர் நாடுகளில் அகதி தஞ்சம் கோரியவர்கள் இலங்கை செல்ல முடியாது என பிரான்ஸில் இருக்கும் மனித உரிமைகள் இல்லத்தின் இயக்குநரும்,மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் நாடுகளில் அகதி தஞ்சம் கோரியவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடவுச்சீட்டில் இலங்கை செல்லலாம் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இவ்வாறு வெளிநாடுகளில் கடவுச்சீட்டு உள்ளவர்கள் இலங்கை செல்லலாம் என்ற தகவல் சட்டரீதியாக சாத்தியமற்ற செயல்.
அதாவது, கடவுச்சீட்டு உள்ளவர்கள் இலங்கை செல்வார்களெனில் அவர்களின் கடவுச்சீட்டு நிராகரிக்கப்படும் என்பதுடன், அவர்களின் நிலைமை மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.