ஹொரணை, எடடுகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு போதைப்பொருளுக்கு அடிமையான நபர் ஒருவர் வந்து நான்கு மாதக் குழந்தையை பத்து வயதுக் குழந்தையிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஹொரணை தலைமையக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து ஹொரண ஆதார வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்றதாக காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.
பத்து வயதுக் குழந்தையைக் காவலில் வைத்துள்ள நிலையில் தப்பியோடிய நபர் தீவிர போதைக்கு அடிமையானவர் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், அவரைக் கைது செய்ய விசேட காவல்துறை குழுவை பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.