மண்முனை தென்மேற்கில் "ரன் விமண" சமூர்த்தி வீட்டுத் திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு!















மண்முனை தென்மேற்குப் பிரதேச செயலகப் பிரிவில் 750000 ரூபா பெறுமதியான  "ரன் விமண" சமூர்த்தி வீட்டுத் திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு முதலைக்குடா மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்றது.

முதலைக்குடா மேற்கு கிராம சேவையாளர் திருமதி பி.சோதிமலரின் ஏற்பாட்டில் கொக்கட்டிச்சோலை சமூர்த்தி வங்கி முகாமையாளர் மோசேஸ் புவிராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்முனை தென் மேற்குப் பிரதேச செயலாளர் திருமதி தட்சணகௌரி தினேஸ் பிரதம அதிதியாகவும், மண்முனை தென் மேற்குப் பிரதேச செயலக தலைமைப்பட முகாமையாளர் வி.வரதராஜன், முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.தியாகராஜா மற்றும் சமூக அபிவிருத்தி மன்ற உதவியாளர் எஸ்.ருசகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.