வடக்கு கிழக்கு பகுதிகளில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அனுட்டிக்கப்படுகின்ற பூரண ஹர்த்தால், கடையடைப்புப் போராட்டத்திற்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி பூரண ஆதரவு!

 

 

 (கல்லடி செய்தியாளர்)

வடக்கு கிழக்கு பகுதிகளில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை
(28) அனுட்டிக்கப்படுகின்ற பூரண ஹர்த்தால், கடையடைப்புப்  போராட்டத்திற்கு ஈரோஸ் ஜனநாயக முன்னணி தனது முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கவுள்ளதாக ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் லக்ஸ்மன் லக்கி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


அவ்வூடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின்  சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தால் மற்றும் முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியிலுள்ள மனிதப்புதைகுழிக்கு பக்கசார்பற்ற நீதிவிசாரணை கோரி நடாத்தப்படும் அனைத்து அற வழிப் போராட்டத்திற்கும்  ஈரோஸ் ஜனநாயக முன்னணி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றது

'தாமதிக்கப்படும் நீதி
மறுக்கப்படும் நீதியாக
எமது அரசியல் கட்சி கருதுகின்றது"

இந்தவகையில்  வலிந்து  காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தின் நியாயத் தன்மையை எமது கட்சி உணர்ந்து மதிக்கின்றதுடன், அதற்கு எமது முழு ஆதரவையும், பங்களிப்பையும் வழங்குகின்றோம்.

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் வெற்றிபெற அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறும் இவ்வேளையில் வினயமுடன் கேட்டுக் கொள்கின்றோம்

இதனை ஏற்று
அரசியல் கட்சிகள்,
மாணவர் அமைப்பினர்கள்,
தனியார் துறையினர்கள், போக்குவரத்துத் துறையினர்கள், சட்டவாளர்கள்,
இனவுணர்வாளர்கள், சமயத்தலைவர்கள், பொது மக்கள், சமய மற்றும் சமூக அமைப்பினர்கள்,
பொது அமைப்பினர்கள்,  சமுக ஆர்வலர்கள் இதற்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு ஈரோஸ் ஜனநாயக முன்னணி கட்சியினராகிய நாம்   வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் அவ்வூடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.