(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு வரையறுக்கப்பட்ட பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிள்ளையாரடி சௌக்கிய பராமரிப்பு பீட வளாகத்தில் "கோப் பிறஸ்" ஐ இன்று திங்கட்கிழமை (10) உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தது.
மட்டக்களப்பு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் நா.சசிதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாணக் கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருமான எந்திரி. என்.சிவலிங்கம், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வி.கனகசிங்கம், கிழக்குப் பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் பேராசிரியர் கே.ஈ.கருணாகரன், கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடப் பீடாதிபதி கலாநிதி தில்லைநாதன் சதானந்தன், மட்டக்களப்பு கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.வி.தங்கவேல், கிழக்குப் பல்கலைக்கழகப் பதிவாளர் ஏ.பகீரதன், கிழக்குப் பல்கலைக்கழக நிதியாளர் எம்.எம்.எம்.பாரீஸ், கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் நலன்புரிப் பகுதி சிரேஷ்ட உதவிப் பதிவாளர் ஐனாப் எம்.எப்.மர்சூக், கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட உதவிப் பதிவாளர் எம்.சதீஸ் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.