13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தீர்மானிப்பதற்காக ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வக்கட்சி கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.
சர்வகட்சி கூட்டத்துக்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளதாக, அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியும் அதே நிலைப்பாட்டிலேயே உள்ளதாக, மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.