கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம் நடத்திய 25 ஆவது சுவாமி விபுலானந்தர் நினைவுப் பேருரை இன்று புதன்கிழமை சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக இராஜதுரை அரங்கில் இடம்பெற்றது.
சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம், மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எந்திரி நடராஜா சிவலிங்கம், ஓய்வு பெற்ற ஆசிரியையும், விபுலானந்தரது பேர்த்தியுமான திருமதி விஜயலெட்சுமி புவனேந்திரராஜா, மட்டக்களப்பு ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் நீலமாதவானந்தாஜீ மகராஜ் மற்றும் அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள், விரிவுரையாளர்கள், இலக்கியவாதிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது "சிலப்பதிகாரப் பனுவலில் சமயக் கருத்தியல்கள்" எனும் தலைப்பில் கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் சின்னத்தம்பி சந்திரசேகரம் நிகழ்த்தினார்.