அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தினால் மட்டக்களப்பு -வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் 41 இளைஞர் யுவதிகளுக்கு தொழில் முனைவோருக்கான உதவு ஊக்கத் தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பல்வேறு திட்ட அமுலாக்கங்களுக்குள் உள்வாங்கப்பட்ட இளைஞர் யுவதிகளில் தமது ஆற்றல்களை வெளிப்படுத்திச் செயல்பட்ட முன்னோடி இளைஞர்களைப் பாராட்டி ஊக்குவித்து உதவியளிக்கும் நிகழ்வில் இந்த இளைஞர் யுவதிகள் 41 பேருக்கும் தலா 30 ஆயிரம் ரூபாய்க்குரிய காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.