மட்டக்களப்பு ஏறாவூரில், பாரிய மரக்கிளையொன்று உடைந்து விழுந்ததில் நீதிமன்றத்தில் தடுத்து வைத்திருந்த பல வாகனங்கள்
சேதமடைந்ததாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தினால் தடுத்துவைக்கப்பட்ட நிலையில், அருகிலுள்ள கோயில் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது
அங்கிருந்த அரச மரத்தின் பாரிய கிளையொன்று முறிந்து விழுந்துள்ளது.
இதனால் பல வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முறிந்து விழுந்த மரத்தின் பாகங்கள் பொதுமக்களின் உதவியுடன் அகற்றப்பட்;டமை குறிப்பிடத்தக்கது