உலகிலேயே அதிக வெப்பமான மாதமாக ஜூலை நிச்சயம் மாறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு இலட்சத்து இருபதாயிரம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வெப்பமான மாதமாக இது இருக்கலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
உலகம் முழுவதும் வெப்ப அலைகளின் தாக்கத்தால், தற்போது வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
கடந்த 6ம் திகதி முதல் தற்போது வரை இந்த மாதத்தில் 23 வெப்பமான நாட்கள் பதிவாகியுள்ளன.
இதன் சராசரி வெப்பநிலை 16.95 டிகிரி செல்சியஸ் ஆகும், இதற்கு முந்தைய அதிகபட்ச வெப்பநிலை ஜூலை 2019 இல் பதிவு செய்யப்பட்டது.