இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.


 

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ரா அடுத்த வாரம் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இந்திய விஜயம் தொடர்பில் கலந்துரையாடுவதே இதன் பிரதான நோக்கம் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய வெளிவிவகார செயலாளர் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி மற்றும் அமைச்சர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.