தமிழ்நாட்டின் தனுஸ்கோடி கரையில் இருந்து இலங்கை - தலைமன்னார் வரையிலான 32 கிலோமீட்டர் நீளமுடைய பாக்கு நீரிணையை 12-மணித்தியாலங்களில் நீந்தி கடந்து சாதனை புரிந்த மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தவேந்திரன் மதுஷிகன் (வயது 18) அவர்களுக்கு மட்டக்களப்பு 231 கட்டளை தளபதி பிரிகேடியர் திலீப் பண்டார அவர்களின் தலைமையில் கல்லடி இராணுவ முகாமில் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (04) திகதி காலை இடம் பெற்றது. .
பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் எதிரிமான, மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார், மட்டக்களப்பு LIONS CLUB கழகத்தின் தலைவர் புஸ்பாகரன், புனித மிக்கேல் கல்லூரியின் அதிபர், மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் வீ.பிரதீபன், மற்றும் மதுஷிகனின் பெற்றோர், மாவட்ட ஊடக பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தன், இராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட சாரண ஆசிரியர்கள், சாரண மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தனர்