இன்று காலை மன்னம்பிட்டியில் மற்றுமொரு விபத்து .

 


மன்னம்பிட்டிய, அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை இடம்பெற்ற மற்றுமொரு பேருந்து விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பயணிகள் காயமடைந்துள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பேருந்து யாத்திரிகர்களை ஏற்றிக்கொண்டு பாதெனியவிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த பாரவூர்தி மீது பேருந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் தலாவ பகுதியைச் சேர்ந்த 32 மற்றும் 71 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.