அமெரிக்க டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை ஏற்ற இறக்கம் காணப்படுகிறது

 

 


 இலங்கை மத்திய வங்கி  இன்று (04) வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்  அடிப்படையில் அமெரிக்க டொலரின் இன்றைய கொள்வனவு விலை 299.87 ரூபாவாகவும், விற்பனை விலை 314.98 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நீண்ட விடுமுறைக்கு முன்னதாக கடந்த மாதம் 28 ஆம் திகதி அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 301.15 ரூபாவாகவும், விற்பனை விலை 316.67 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.