"தராக்கி" ஈழத்தமிழ் ஊடக முன்னோடி எனும் கட்டுரை தொகுப்பு நூல் வெளியீட்டு விழா கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது.





இந்நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் உருவப்படத்திற்கு அவரது மனைவி பவானி சிவராம் அவர்களினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டதனைத்தொடர்ந்து தீபச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தியதுடன் மல்ர அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நூலின் முதல் பிரதி சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராமின் மனைவி பவானி சிவராம் அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிறப்பிக்கும் முகமாக பிரபல பாடகர் ஜெயதிலக பண்டார அவர்களினால் சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராம் பற்றி எழுதி இசையமைக்கப்பட்டு பாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் தேவதிரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், ஞா. சிறிநேசன், துரைராஜசிங்கம், சிரேஸ்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் மனைவி பவானி சிவராம் மற்றும் அவரது குடும்ப உறவுகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் நகுலேஸ், மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக சங்க உறுப்பினர்கள், முன்னால் அரச திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உரைகள்.

01. செல்வராஜா கஜேந்திரன் - பாராளுமன்ற உறுப்பினர்

02. பா.அரியநேந்திரன் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்

03. பெடிகமகே - தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர்