பங்கீ ஜம்பிங் (BUNGEE JUMPING) விளையாட்டு முதல் தடவையாக இலங்கையில் .

 


தென்னாசியாவின் உயர்ந்த கோபுரமாகத் திகழும் தலைநகரில் உள்ள தாமரைக் கோபுரத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் பங்கீ ஜம்பிங் (BUNGEE JUMPING) ஆரம்பிப்பதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முகாமைத்துவ தலைவர் பிரசாந்த் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்திற்காக கொழும்பு தாமரைக் கோபுரம் மற்றும் சிங்கப்பூர் கோ பங்கி நிறுவனம் இணைந்து இலங்கையில் பங்கீ ஜம்பிங் ஆரம்பிப்பற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இத்திட்டம் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்த நிலையில் ‘ஸ்கை’ வளைவில் மேம்படுத்தல்கள் செய்யப்படவுள்ளதால் டிசம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாகவும் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

நடைபெறவுள்ள இவ்விளையாட்டு உலகின் உயரமான பங்கீ ஜம்பிங் விளையாட்டாக பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.