பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற Mrs Earth 2023 சர்வதேச போட்டியில்
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சஷ்மி திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.
சஷ்மி திசாநாயக்கா Mrs Earth சர்வதேச பட்டத்தை வென்றதுடன், Mrs Earth
Best in Catwalk, Mrs Earth Overall Best in Gown, Mrs Earth Overall Best
In Resort wear, Mrs Earth Best In Talent ஆகிய அனைத்து துணைப்
போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
Mrs Earth Sri Lanka 2023 போட்டியின் தேசிய இயக்குனர் சரித் குணசேகர
மற்றும் அவரது பயிற்சியாளர் ருக்மல் சேனாநாயக்க ஆகியோர் அவரது
பயிற்சியாளராக பணியாற்றியுள்ளனர்.