கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கான விடுமுறை ஓகஸ்ட் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கண்டி நகரில் இடம்பெற்று வரும் பெரஹரா (ஊர்வலம்) காரணமாக ஏற்படக்கூடிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ.கமகே தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், குறித்த பாடசாலைகள் எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன.
அதற்கமைய, பின்வரும் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் செப்டெம்பர் 01ஆம் திகதி திறக்கப்படும், ஏனைய பாடசாலைகள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி நாளை (28) திறக்கப்படவுள்ளன.
விடுமுறை நீடிக்கப்பட்டுள்ள பாடசாலைகள்
கண்டி நகரத்திலிருந்து கட்டுகஸ்தோட்டை பாலம் வரை உள்ள பாடசாலைகள், கண்டி நகரத்திலிருந்து பேராதனை பாலம் மற்றும் கன்னொருவை சந்தி வரை உள்ள பாடசாலைகள்
கண்டி நகரிலிருந்து வெவரும ஊடாக அம்பிட்டிய வரை உள்ள பாடசாலைகள் கண்டி நகரத்திலிருந்து தென்னகும்புர பாலம் வரை உள்ள பாடசாலைகள் தொடம்வல ரோயல் ஆரம்பப் பாடசாலை / போவல வத்த /ஹன்தான கண்டி எசல பெரஹரா எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை இடம்பெறுகின்றது.