நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 04 மாகாணங்களில் சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 


நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 04 மாகாணங்களில் சுமார் 90,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 18 பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.