இரவு 10 மணிக்கு மூடப்படும் நாடு ஒருபோதும் வளர்ச்சி அடையாது-டயானா கமகே

 


இரவுப்பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்தி நாட்டை வளர்ச்சியடைய செய்யவேண்டுமென சுற்றுலா இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தெரிவித்தார்.

நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

இரவு வாழ்க்கை என்பது விபசாரத் தொழில் அல்ல, அந்தத் தொழிலுக்கு நேரமில்லை, தேவையென்றால் 24 மணி நேரமும் இதனை நடைமுறைப்படுத்தலாம்.

 இரவு 10 மணிக்கு மூடப்படும் நாடு ஒருபோதும் வளர்ச்சி அடையாது. உலகில் ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமானால், இரவுப் பொருளாதாரம் இருக்க வேண்டும் என்றும், எந்த நாட்டின் வருமானத்திலும் 70% இரவுப் பொருளாதாரத்தில் இருந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

இங்கிலாந்து இரவு நேரப் பொருளாதாரத்தில் மட்டும் 66 பில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.