கனடாவின் டொரண்டோவில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காணாமல் போனவர் தமிழ் என்ற பெயருடைய 12 வயதுடைய சிறுமியாவார்.
கடந்த 31ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில், லோரன்ஸ் அவென்யூ கிழக்கு மற்றும் ஓர்டன் பார்க் வீதி பகுதியில் கடைசியாக காணப்பட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5 அடி 4 அங்குலம் உயரமுடைய மெல்லிய தேகமுடைய காணாமல் போன சிறுமி, கடைசியாக கறுப்பு நிற ரி சேட் மற்றும் கறுப்பு நிற பான்ட் அணிந்திருந்தார் எனவும் டொரண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.