ஆசிரியர் கலாசாலை இறுதிப் பரீட்சை மற்றும் பயிற்றப்படாத ஆசிரியர்களுக்கான பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஆசிரியர் கலாச்சாலை பரீட்சைகள் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரீட்சை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் தனிப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.