மலையக மக்களின் 200 ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடைபவனி!

















(கல்லடி செய்தியாளர்)

மலையக மக்களின் 200 ஆவது நிறைவையொட்டி கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின்  ஏற்பாட்டில் "வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட.... மலையகம் 200" எனும் தொனிப் பொருளில் மாபெரும் நடைபவனியொன்று  செவ்வாய்க்கிழமை (08) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

இப்பேரணியானது வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து ஆரம்பமாகி, திருமலை வீதியூடாக மட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்கா வளாகத்தை வந்தடைந்து.

இதன்போது கலந்து கொண்டோரால் "கட்டாய காணி உரிமை வேண்டும்", "மலையகத்திற்கான தனிப் பல்கலைக்கழகம் கூடிய விரைவில் .ஆரம்பிக்கப்பட வேண்டும்", "மலையகக் கல்வியில் அரசியல் தலையீடு வேண்டாம்", "மலையக மக்களுக்கான உழைப்பின் ஊதியத்தை வழங்கு", "மலையகத் தமிழர் என்ற எங்களுக்கு அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்" போன்ற கோசங்கள் எழுப்பப்பட்டதோடு, பதாதைகளையும் ஏந்திச் சென்றனர்.

நடைபவனியின் நிறைவில் மட்டக்களப்பு காந்திப் பூங்கா வளாகத்தில் ஒன்று கூடி, தமது கோரிக்கைகளை உரிய தரப்பினர் நிறைவேற்றிட வேண்டுமென உரத்த குரலில் வெளிப்படுத்தினர்.