கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாக போற்றப்படும் தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 2023.07.13 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது .
கொடியேற்றத்தினைத் தொடர்ந்து இந்த ஆலயத்தில் 21 நாட்கள் திருவிழாக்கள் வெகு சிறப்பாக இடம் பெற்றது .
கிழக்கின் சகல பிரதேசங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தாந்தாமலை முருகன் ஆலயத்துக்கு வழிபாடுசெய்ய வருகை தந்திருந்தனர் .
நேற்றைய தினம் 2023.08.01 திருவிழா நிகழ்வு முனைக்காடு கிராம மக்களால் முன்னெடுக்கப்பட்டது குறிப்பிட்டதக்கது
2023.08.02.இன்று புதன் கிழமை காலை வேளை திருகோண நட்சத்திரத்தில் தாந்தாமலையின் அடிவாரத்தில் அமையப்பெற்ற தீர்த்தக் குளத்தில் தீர்த்தோற்சவதுடன் மகோற்சவத் திருவிழா இனிதே நிறைவு பெற்றது.