மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா 2023.08.10 ஆரம்பமானது. போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் திருவிழா தொடர்பான அறிவிப்பை வெளியிடப்பட்டதை தொடர்ந்து திருவிழா ஆரம்பமானது.
கதிர்காம ஆலயத்தின் பூஜை முறைகளுக்கு ஒப்பானதாக, கப்புகர்களினால்
வாய்கட்டப்பட்டு திருவிழா நடைபெற்று வருகின்றது. விநாயகப்பெருமானுக்கு
விசேட பூஜைகள் நடைபெற்று, கொடி ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு, கொடியேற்றம்
செய்யப்பட்டது.
இருபது தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவில் விசேட பூஜைகள் இடம்பெற்று
முருகப்பெருமானின் வெளி வீதி உலா நடைபெறவுள்ளது. கொடியேற்றத் திருவிழாவில்
பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டிருந்தனர்.