மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவினால் நடாத்தப்படும் 2023
ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விழா மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நேற்று ஆரம்பமானது . சுகாதார உத்தியோகத்தர்களிடையே தொற்றா நோய்கள் ஏற்படுவதை
தடுக்கும் வகையிலும் உத்தியோகத்தர்களின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும்
நோக்கிலும், ஆரோக்கிய வாழ்விற்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில்
ஈடுபடுதல் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும்
நோக்குடனும் இவ் விளையாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஆரம்பமான விளையாட்டு விழா, இன்றைய தினமும் மட்டக்களப்பு பிராந்திய
சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி. சுகுணன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
களுவாஞ்சிகுடி,
வாழைச்சேனை, காத்தான்குடி, ஏறாவூர் வைத்தியசாலைகள் மற்றும் வடக்கு ,தெற்கு
பொதுசுகாதார அலுவலக பிரிவு உத்தியோகத்தர்கள் என
7 அணிகள் விளையாட்டு விழாவில் பங்கேற்கின்றன.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவினால் நடாத்தப்படும் 2023
ஆம் ஆண்டுக்கான விளையாட்டு விழா ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு
மாகாண சுகாதார பணிப்பாளர் ஜெ.முரளிதரன் கலந்துகொண்டார்.
புனித மிக்கேல்
கல்லூரி அதிபர் பிரபாகரன், பிரதேச செயலாளர்களான உதய ஸ்ரீரீதர் மற்றும்
சுதாகரன் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாகப் பங்கேற்றனர்.