உள்ளுர் சந்தையில் முட்டை விலையை நிலைப்படுத்தும் நோக்கில் அரச வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் முட்டைகளை இறக்குமதி செய்து உள்ளுர் சந்தைக்கு விநியோகிப்பதற்காக இதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, கால்நடை உற்பத்திகள் மற்றும் சுகாதாரத் திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 03 இந்தியக் கம்பனிகளிடமிருந்து விலைமனு கோரப்பட்டுள்ளது.
குறித்த விலைமனுக்களின் அடிப்படையில் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர பெறுகைக் குழுவின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு அரச வர்த்தக (பல்நோக்கு) கூட்டுத்தாபனத்தின் மூலம் எதிர்வரும் 03 மாதங்களுக்கு 92.1 மில்லியன் முட்டைகளைக் கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.